Uncategorized

ஜோதிடம்

1211368.jpg

பொதுப்பலன்: வாகன உதிரி பாக வியாபாரம் தொடங்க, மருந்துண்ண, செங்கல் சூளை பிரிக்க, நவகிரக சாந்தி செய்ய, பணியாட்களை வேலையில் சேர்க்க, புது பதவி ஏற்க, ரத்தினங்கள் அணிய, பயணம் தொடங்க, பழைய நண்பர்களை சந்திக்க நல்ல நாள். யோக ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம். புதன் பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள், பாசிப் பருப்பு பாயாசம் நிவேதனம் செய்தால் மனக் குழப்பம், பதற்றம் நீங்கும். பச்சைப் பயிறு தானம் செய்வதும் நன்மை அளிக்கும்.

மேஷம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். அரசு வேலைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் ஏற்பாடாகும். கலை பொருட்கள் சேரும்.

மிதுனம்: நெடுநாள் பழகிய நண்பர் ஒருவரின் நட்பை இழப்பீர்கள். வழக்குகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் வரக் கூடும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். அக்கம் பக்கத்தினருடன் அளவாக பழகவும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். வாகனத்தை சீர் செய்வீர். பிள்ளைகளின் பிடிவாதம் குறையும்.

சிம்மம்: குழப்பங்கள் நீங்கி பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். புதிய நண்பர்களின் சந்திப்பு நிகழும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வாகனப் பழுது நீங்கும்.

கன்னி: வீண் செலவுகளை தவிர்ப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உயரதிகாரிகளின் அன்பை பெறுவீர்கள். தாயாரின் உடல்நலம் சீராகும்.

துலாம்: வியாபாரரீதியாக முக்கிய பிரபலங்களை சந்திப்பீர்கள். வங்கியில் கேட்ட கடனுதவி கிடைக்கும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் விட்டு கொடுத்து போவீர்கள். வெளியூர் பயணங்கள் உற்சாகம் தரும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இணக்கமாக இருப்பீர்.

தனுசு: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளின் வெற்றி காண்பீர்கள். கணவன் -மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் விலகும். வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள்.

மகரம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. ஒருவித சலிப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து போகும். குடும்பத்

தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். சிறிது நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது.

கும்பம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்.

மீனம்: உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பதால் மனநிறைவு உண்டாகும். மகன், மகளின் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *