சென்னை, கோவை பள்ளிகளுக்குத் தொடரும் வெடிகுண்டு மிரட்டல் – வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற திட்டம்?!

Mixcollage 16 Feb 2024 07 45 Pm 3570.jpg

அதேபோல, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே இமெயிலிலிருந்து ஒரே மாதிரியான மிரட்டல் வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்த இமெயில் ஐடி சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புரோடான்(Proton mail) எனும் தனியார் நிறுவன இமெயில் நெட்வொர்க்கின் ஐடி என்பதைக் கண்டறிந்த தமிழ்நாடு காவல்துறை அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், புரோடான் நிறுவனம் சரிவர பதிலளிக்காததால், புரோடான் மெயில் நிறுவனத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கவேண்டும் என மத்திய மத்திய தகவல் தொடர்புதுறையிடம் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டது.

விட்சர்லாந்தைச் சேர்ந்த புரோடான்(Proton mail) எனும் தனியார் நிறுவன இமெயில் நெட்வொர்க்

விட்சர்லாந்தைச் சேர்ந்த புரோடான்(Proton mail) எனும் தனியார் நிறுவன இமெயில் நெட்வொர்க்

இந்த நிலையில், மீண்டும் சென்னை மற்றும் கோவையிலுள்ள இரு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது மேலும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஞாயிறன்று கோவை வடவள்ளி அருகே காளம்பாளையத்தில் உள்ள பத்ம சேஷாஸ்திரி தனியார் மேல்நிலைப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதையடுத்து காவல்துறையினரின் தீவிர சோதனையில் அது வதந்தி என்பது நிரூபனமானது. இந்த நிலையில், மீண்டும் அதே பள்ளிக்கு இமெயில் மூலம் நேற்று (திங்கள்) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக வடவள்ளி காவல்துறைக்கு பள்ளி நிர்வாகத்தினர் தகவலளிக்க, விரைந்து வந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்காத நிலையில் அதுவும் வதந்தி என்றானது.

cbcid சிபிசிஐடி

cbcid சிபிசிஐடி

இதேபோல, கடந்த மார்ச் 1-ம் தேதி சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அதே பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் தவறான செய்தி என்பது தெரியவந்தது. மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் மீண்டும் ஒரே பள்ளிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள இந்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *