“இந்தியா முழுவதும் போதை பொருள் புழக்கம்; கடத்தலை தடுப்பது மத்திய அரசின் வேலை..!” – அமைச்சர் ரகுபதி | Dmk minister ragupathy talks about drug mafia

Screenshot 20240305 211655 143.png

இந்தியா முழுவதும் போதை பொருள் கடத்தல் கட்டுப்படுத்துவது யாருடைய வேலை அதற்கு மற்றவர் மீது பழி போடுவதுதான் மோடி ஃபார்முலாவா? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் போதைபொருள் கடத்தலை தடுக்கட்டும். தமிழகத்தில் தி.மு.க போதை பொருளை தடுக்க வேண்டும் என போராடி வருகிறது. அண்ணாமலைக்கு போதை பொருள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் அதனை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்கவில்லை என்றால் அது தவறு.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பு

குற்றப் பின்னணி இருப்பவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இல்லை. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் தோறும் கல்வி திட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இல்லம் தோறும் குட்கா என பேசியுள்ளார். அவர் மீது வழக்கு இருக்கிறது என்பதை மறந்து அப்படி பேசுகிறார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரை தேர்தலுக்கு தேர்தல் எய்ம்ஸ் வரும். தேர்தல் முடிந்தவுடன் எய்ம்ஸ் போய்விடும். துறைமுகம்,  ரயில் நிலையம் , விமான நிலையம் இவற்றையெல்லாம் தனியாருக்கு வழங்கியதால் அதன் கட்டுப்பாடு அரசிடம் இல்லை. ஆனால், அவற்றின் பராமரிப்பு வேலையை மத்திய அரசு செய்கிறது. இதற்காக தான் தனியார்மயத்தை எதிர்க்கிறோம். செந்தில் பாலாஜி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடன் அவருக்கு பிணை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *