“இதுதான் கடைசி வீடியோ… என்னுடைய மரணம் சீமான் யார் என்பதை புரியவைக்கும்!” – நடிகை விஜயலட்சுமி | Actress Vijayalakshmi says she will end his life, video on social media

Gridart 20240306 103832613.jpg

சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த வீடியோவில், “2008-ல் என் அக்காவின் பிரச்னைக்காகத் தான் சீமானிடம் சென்றோம். அப்போது சீமானுக்குத் திருமணமாகவில்லை. என்னைத் திருமணம் என்று செய்துகொள்கிறேன் என்று கூறி, மூன்று வருடம் என்னுடன் குடும்பம் நடத்தி, என் வாழ்க்கையைச் சீரழித்தார். மேலும், ரகசியமாக என்னைத் திருமணமும் செய்து, அதனை வெளியில் சொல்லாமல் என்னை ஏமாற்றினார். பிறகு தனக்குப் பிரச்சனை என்று கூறி, என்னை அப்படியே நடுரோட்டில் விட்டுச் சென்றார்.

நடிகை விஜயலட்சுமி

நடிகை விஜயலட்சுமி

சென்ற ஆண்டு `என்னைப் பற்றி பேச வேண்டாம். நான் காப்பாற்றுகிறேன். நான் அவரின் புருஷன். மாதம் ரூ.50,000 கொடுக்கிறேன்” என மதுரை செல்வத்தை வைத்து டீலிங் பேசினார். ஆனால், இப்போது நாடகம் போடுகிறார். கர்நாடகாவில் என்னால் வாழ முடியவில்லை என்று நான் சொல்லும்போது, பரவாயில்லை சாகட்டும் விடு என்கிறார் என்றால், அடுத்ததாக அதுதான் நடக்கப்போகிறது. இதுதான் தமிழ்நாட்டுக்கு என்னுடைய கடைசி வீடியோ. இரண்டு நாள்களுக்குப் பிறகு, நான் எப்படி இறந்தேன் என்பதை கர்நாடகாவிலிருந்து தெரியப்படுத்துவார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *