Electoral Bond: தேர்தலுக்கு முன்பே `நன்கொடை’ விவரம் வெளியாவதை தடுக்கிறதா பாஜக?! | Is BJP prevent the releasing of electoral bonds scheme detail before lok sabha elections?

Ap24031193595271.jpg

எனவேதான், அந்த விவரங்களை தேர்தலுக்கு முன்பு வெளியிடாமல் இழுத்தடிப்பதற்கான முயற்சியாக, ஜூன் 30-ம் தேதிவரை காலஅவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.ஐ மனுத் தாக்கல் செய்திருக்கிறது. ‘தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் ரகசிய மொழியில் எழுதப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கின்றன’ என்று எஸ்.பி.ஐ தரப்பில் காரணம் சொல்லப்பட்டிருக்கிறது.

வங்கித்துறையில் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுவிட்டது. எந்தவொரு புள்ளிவிவரங்களையும் ஒரு சில நிமிடங்களில் எடுத்துவிட முடியும். அப்படியிருக்கும்போது, ஜூன் 30-ம் தேதி வரை காலஅவகாசம் கேட்பதெல்லாம், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற கணக்கில்தானே தவிர, வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?

எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் கடுமையாக சாடியுள்ளன. காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “நன்கொடை வியாபாரத்தை மறைப்பதற்காக மோடி தனது முழுப் ஆற்றலையும் செலுத்தியிருக்கிறார். உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட நிலையில், தேர்தலுக்கு முன் வெளியிடக் கூடாது என்று எஸ்.பி.ஐ விரும்புவது ஏன்… ஒரே கிளிக்கில் பெறக்கூடிய தகவலுக்கு ஜூன் 30 வரை அவகாசம் கேட்பது, `பருப்புகளில் கருப்பு எதுவும் இல்லை, மொத்த பருப்பும் கருப்பாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.”” என சாடி இருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, “நிச்சயம் இது நீதியின் கேலிக்கூத்தாக இருக்கும். மோடியும், பா.ஜ.க-வும் அம்பலமாகாமல் பாதுகாக்க பொதுத் தேர்தல் முடியும் வரை கால அவகாசம் கேட்கிறதா எஸ்.பி.ஐ?” என கேள்வியெழுப்பியிருக்கிறார்.

தமிழக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனும் இந்த விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கியை மத்திய அரசை சாடியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *