Electoral Bond: `தகவலை ஒப்படைக்க 4 மாதம் கால அவகாசம் கோரும் SBI’ – விளாசும் எதிர்க்கட்சிகள்! | SBI asks 4 months time to submit electoral bond information, opposition parties slams BJP and SBI

Gridart 20240305 123308894.jpg

மேலும், பா.ஜ.க எம்.பி-யின் புகாரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, “பா.ஜ.க-வின் நன்கொடையாளர் பட்டியலைத் தேர்தலுக்கு முன் வெளியிடாமல் இருக்க தேசியமயமாக்கப்பட்ட வங்கி (எஸ்.பி.ஐ) வளைந்து கொடுக்கும்.

மஹுவா மொய்த்ரா

மஹுவா மொய்த்ரா

இங்கு, கட்டாயமாகத் தேர்தல் பத்திரங்கள் விவரங்களை உச்ச நீதிமன்றம் வெளியிடச் சொன்னது விஷயமல்ல. மோடிக்கும், பா.ஜ.க-வுக்கும் இருக்கும் உறவு தான் முக்கியமான விஷயம்” என்று விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எஸ்.பி.ஐ-யின் கால அவகாச கோரிக்கை குறித்துப் பேசுகையில், “இது ஒரு கேவலமான வாதம். இரண்டு நிமிடங்களில் வெளியிடக்கூடிய விஷயம் இது.

பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன்

இவ்வளவு பெரிய பொருளாதார நாட்டில், இருப்பதிலேயே பெரிய வங்கியால் இவ்வளவு கம்மியான தகவலை மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் அளிக்க முடியவில்லை என்றால், வாங்கி நிர்வாகமே ஒழுங்காக இல்லையோ என்ற அச்சம் வருகிறது. நாளைக்கே விவரங்களைக் கொடுக்கச் சொன்னால், கொண்டு வந்து கொடுக்கக்கூடிய அளவுக்கு கம்யூட்டர் சிஸ்டம் இருக்க வேண்டும். இல்லையென்றால், வங்கித் தொழிலிலேயே இருக்க கூடாது” என்று சாடினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *