Chennai Corporation Budget 2024: மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை… ஐடியாக்கள் பகிரும் நிபுணர்கள்..! | Psychological counseling for students…Experts sharing ideas..!

Whatsapp Image 2024 03 05 At 5 09 01 Pm.jpeg

சென்னையிலுள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உளவியல்ரீதியாக வரும் பிரச்னைகளை எதிர்க்கொள்வதற்கு ஆலோசகர்களை பணியமர்த்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் 35 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை குழந்தைகளிடம் எப்படி எடுத்துச்செல்வது, உளவியல் ஆலோசகர்களுக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், எந்தெந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும், ஆலோசனை கொடுப்பதால் எந்த மாதிரியான பிரச்னைகளைத் தவிர்க்க முடியும் என விளக்குகிறார் சென்னையிலுள்ள “சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் (Sneha Suicide Prevention Centre) நிறுவனர் லட்சுமி விஜயகுமார்.

”பள்ளிகளில், உடல் ஆரோக்கியமாக இருக்க என்ன சாப்பிட வேண்டும், என்ன உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறோம். ஆனால், மனம் ஆரோக்கியமாக இருக்க மாணவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுப்பதில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்துகொண்டே இருக்கிறது. மாணவர்களுக்கு சிறுவயதில் இருந்தே பிரச்னைகளை எப்படி சமாளிக்க வேண்டும், தோல்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், உணர்ச்சிகளை எப்படிக் கையாள வேண்டும், மனதளவில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை யாரிடம் சொல்லி உதவி கேட்க வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பிரச்னைகளை சந்திக்கையில் மனச்சோர்வு, பயம், தற்கொலை எண்ணம் வராது. மாணவர்கள் நல்லது, கெட்டதை யோசித்துப் பார்க்கக்கூடிய ஆளுமைகளாக வளர்வார்கள். இதுவொரு நல்ல திட்டம்.

Chennai Corporation Budget 2024

Chennai Corporation Budget 2024

மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் உளவியல் படித்தவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். தவிர, மாணவர்கள் ஆலோசகர்களுடன் பயமில்லாமல் பேசக்கூடிய அளவுக்கு அவர்கள் இலகுவாகவும் இருக்க வேண்டும்” என்றவர், உளவியல் ஆலோசகர்கள் மாணவர்களிடம் அதிக கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதுபற்றியும் விவரித்தார்.

”மாணவர்களிடம் இரண்டு விளைவுகள் வரக்கூடாது. ஒன்று தற்கொலை எண்ணம். இரண்டாவது போதைப்பொருள்களின் மீதான நாட்டம். இவ்விரண்டில்தான் ஆலோசகர்கள் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு பிரச்னைகள் பெரும்பாலும் அவர்கள் வீட்டைச்சுற்றியோ அல்லது பள்ளியைச்சுற்றியோதான் வரும். பள்ளியைப் பொறுத்தவரை, மாணவர்கள் படிப்பதற்கு கஷ்டபபடுகிறார்களா…அவர்களுக்குப் பிடிக்காத பாடத்தில் பெற்றோர்கள் சேர்த்துவிட்டார்களா… இந்தப் பாடத்தை தன்னால் படிக்க முடியாது என்று தன்னம்பிக்கை இழந்திருக்கிறார்களா என்று விசாரிக்க வேண்டும். வீட்டைப் பொறுத்தவரை, பெற்றோருக்கிடையில் அடிக்கடி சண்டை வருகிறதா… டியூஷன் கட்டணம் செலுத்த முடியவில்லையா… அப்பா குடிக்கு அடிமையாகி பிரச்னை செய்கிறாரா என்பதையும் விசாரிக்க வேண்டும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *