பிரதமர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு அழைப்பு(?)… மதுரை ஹோட்டலில் மோடியை சந்தித்த பி.டி.ஆர்?!

Whatsapp Image 2024 03 05 At 14 02 09.jpeg

அந்த அடிப்படையில் மதுரை பசுமலை ஹோட்டலில் தங்கியிருந்த பிரதமரை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்ததாகவும். 10 முதல் 15 நிமிடங்கள் இருவரும் பேசியதாக சொல்லப்படுகிறது. அதுபோல் பிரதமர் தூத்துக்குடி சென்றபோது அந்த கான்வாயில் பி.டி.ஆரின் கார் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.

புரோட்டோக்காலை கடந்து தலைமைக்கு தெரியாமல் பிரதமரை சந்தித்துள்ளார் என்று பி.டி.ஆருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கினர்.

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

அது மட்டுமின்றி தான் சந்திக்கும், தன்னை சந்திக்கும் எந்தவொரு பிரமுகர் குறித்தும் தன்னுடைய சமூக ஊடகத் தளத்தில் பதிவிடும் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பிரதமருடனான இந்த சந்திப்பை பதிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜன், “பிரதமர் ஒரு மாநிலத்தில் எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்குள்ள மாநில அரசாங்கம் சார்பிலோ, மாநகராட்சி நிர்வாகம் சார்பிலோ புரோட்டோக்கால் அடிப்படையில் ஜனநாயக அடிப்படையில் சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கும் பிரதமருக்கு வரவேற்பதற்கும் மரியாதை செய்யவும், அவருடன் கான்வாயில் உடன் பயணம் செய்வதற்கும் மாநில அரசாங்கத்துக்கு பொறுப்பு உண்டு. அந்த அடிப்படையில் அந்த பணியை செய்வதற்கு எங்கள் முதலைமைச்சரின் அலுவலகத்திருந்து எனக்கு உத்தரவு வந்தது. அதை நிறைவேற்றினேன். இது அரசாங்கத்தினுடைய பணி, தனி நபரின் விருப்பமோ, அரசியலோ கிடையாது”‘ என்று விளக்கம் அளித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *