தொகுதி பங்கீட்டில் முரண்டு பிடிக்கும் கட்சிகள்… நேரில் வரும் அமித் ஷா! – மகாராஷ்டிரா நிலவரம் என்ன? | Amit Shah is coming to speak in person to the rest of the parties,

Amit.jpg

நாளை இதில் இறுதி முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனா(உத்தவ்)விற்கு கூடுதல் தொகுதிகள் கொடுத்து அதில் இருந்து பிரகாஷ் அம்பேத்கர் கட்சிக்கு தொகுதிகள் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதே போன்ற ஒரு நிலை தான் பா.ஜ.க.கூட்டணியிலும் இருக்கிறது.

பா.ஜ.க. கடந்த தேர்தலில் 25 தொகுதியில் போட்டியிட்டது. இம்முறை 30 தொகுதி அல்லது 25 தொகுதியில் போட்டியிட பா.ஜ.க திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கடந்த முறை நாங்கள் 22 தொகுதியில் போட்டியிட்டு இருக்கிறோம். எனவே எங்களுக்கு 22 தொகுதி வேண்டும் என்று சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே) கூறிக்கொண்டிருக்கிறது.

இது தவிர கூட்டணியில் கடந்த ஆண்டு வந்து ஒட்டிக்கொண்ட தேசியவாத காங்கிரஸ்(அஜித்பவார்) கட்சியும் தங்களுக்கு 16 தொகுதிகள் வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கிறது. எனவே தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாமல் பா.ஜ.க. திணறி வருகிறது. இது குறித்து சிவசேனா தலைவர்களில் ஒருவரிடம் பேசியபோது, `அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டேயிக்கு கட்சிகள் கிடைக்க பா.ஜ.க. உதவி இருக்கிறது. எனவே மக்களவை தேர்தலில் நாம் என்ன சொன்னாலும் இரண்டு பேரும் கேட்பார்கள் என்று பா.ஜ.க நினைத்தது. ஆனால் பா.ஜ.க. நினைத்த படி இரண்டு பேரும் நடந்து கொள்ள மறுக்கின்றனர். இரண்டு கட்சிகளும் கூடுதல் தொகுதிகள் கேட்டால்தான் குறைந்த பட்ச தொகுதியாவது கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்”‘ என்றார்.

அஜித் பவார் - ஷிண்டே

அஜித் பவார் – ஷிண்டே

இப்பிரச்னையால் அமித் ஷா இன்று அல்லது நாளை மும்பை வருகிறார். அவர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொகுதி பங்கீடு குறித்து சிவசேனா அமைச்சர் சம்புராஜ் தேசாய் கூறுகையில், ” நாங்கள் 2019-ம் ஆண்டு தேர்தலில் 22 தொகுதியில் போட்டியிட்டு 18 தொகுதியில் வெற்றி பெற்றோம். எனவே எங்களுக்கு இம்முறையும் 22 தொகுதிகள் வேண்டும். இவ்விவகாரத்தில் எங்களது கட்சி தலைவர் இறுதி முடிவை எடுப்பார் என்று தெரிவித்தார். ஏக்நாத் ஷிண்டே அணியில் தற்போது 13 எம்.பி.க்கள் இருக்கின்றனர். அந்த 13 பேருக்கு மட்டும் சீட் கொடுக்கலாம் என்று பா.ஜ.க.நினைத்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *