“தொகுதிப் பங்கீட்டில் எங்கள் விருப்பத்துக்கு மாறாகவும் நடக்கலாம்..!" – தொல்.திருமாவளவன் சொல்வதென்ன?

Thirumavalavan Stalin.jpg

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்னிந்திய மாநிலங்களின் செயற்குழுக் கூட்டம் சென்னை அம்பேத்கர் திடலில் இன்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,“வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தென்னிந்திய மாநிலங்களில் விசிக போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதனடிப்படையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் விசிக தலைவர்கள், பொறுப்பாளர்கள் இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

திருமாவளவன்

ஆந்திரா மாநிலத்தில், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சீட் ஒதுக்க வேண்டுமென, ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா, இந்தியா கூட்டணியின் பொறுப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக் தாகூர் ஆகியோரை சந்தித்து ஆந்திர மாநில பொறுப்பாளர்கள் பேசியிருக்கிறார்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி கர்நாடக மாநிலத்தில் 6 இடங்களிலும், கேரளாவின் இடுக்கி உள்ளிட்ட 3 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்திருக்கிறது.

இந்த மாநிலங்களிலெல்லாம் இந்தியா கூட்டணியுடன் அங்கம் வகிப்பதால், வாக்குகள் பிரிந்து பா.ஜ.க-வுக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். ஆந்திராவில் இந்தியா கூட்டணியில் பங்கெடுக்க வாய்ப்பிருந்தால் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவோம். இல்லையென்றால் எங்கெல்லாம் தனித்துப் போட்டியிட வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் விசிக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

திருமாவளவன்

10-ம் தேதிக்கு மேல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும், EVM மிஷினுடன் சேர்த்து ஒப்புகைச் சீட்டையும் வழங்க வேண்டும், அதனடிப்படையில் வாக்கு எண்ணிக்கை அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவிருக்கிறது. EVM முழுமையாக ஆளும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதால், ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாக நம்புகிறோம். ஒப்புகை சீட்டும் தேவை என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்தோம்.

தி.மு.க-விடமிருந்து தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக் குழுவின் அதிகாரப்பூர்வமான அழைப்பு இன்னும் வரவில்லை. அழைப்பு வரும்போது பேச்சுவார்த்தை நடத்துவோம். எங்களுக்குப் பானைச் சின்னம் வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். அதற்கான உரியப் பதில் இன்னும் எங்களுக்கு வரவில்லை.

evm

தொகுதிப் பங்கீட்டில் எங்கள் விருப்பத்துக்கேற்றவாறோ அல்லது விருப்பத்துக்கு மாற்றமாகவோ நடக்கலாம். ஆனால், என்ன ஆனாலும் எங்கள் கூட்டணி தி.மு.க-வுடன் தான். ஏனென்றால் எங்கள் விருப்பத்தைவிட பா.ஜ.க-விடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கம்.” எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *