`டெல்லி முடிவெடுத்ததன் விளைவு, நாம் அவமானப்பட்டு நிற்கிறோம்’- விளவங்கோட்டில் செல்வப்பெருந்தகை பேச்சு | tamilnadu Congress leader selvaperunthagai speech at vilavangodu

Fb Img 1709642554643.jpg

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட மார்த்தாண்டத்தில் நடந்தது. இதில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங், நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி.உதயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஜய்வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், ரூபி மனோகரன், ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் ஆன்மாவாக, உயிராக இருப்பது கன்னியாகுமரி மாவட்டம். தாமரை மலர்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் எங்கு மலர்ந்து இருக்கிறது. படர் தாமரை வளர்ந்தால் உடலுக்கு சோர்வு வரும், வியாதி வரும். ஆகாய தாமரை வளர்ந்தால் குளங்கள், ஏரிகள் நாசமாகும். பா.ஜ.க-வின் தாமரை மலர்ந்தால் தேசம் சூடுகாடு ஆகும், நாசம் வரும். அதைத்தான் ஒன்பதே முக்கால் ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக மோடி கூறினார். ஆனால் 2 கோடி வேலைகளை அழித்துவிட்டார்.

செல்வப்பெருந்தகைக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது

செல்வப்பெருந்தகைக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது

காங்கிரஸ் ஆட்சி நடத்தியதில் நாடு பின்னடைவை சந்தித்ததாக 2014-ல் சொன்னார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுயசார்புள்ள நாடாக இந்தியாவை மாற்றுவோம். இறக்குமதியை செய்யாமல் ஏற்றுமதியை மட்டும் செய்வோம் என்றார். ஆனால் தற்போது இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி நலிவடைந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *