Tamil News Live Today: சென்னை மக்களின் கவனத்துக்கு… பிரதமர் மோடியின் சென்னை பயணத் திட்டம்!| Tamil News Live Today live updates dated 04-03-2024

Pm Modi Tirunelveli Public Meeting 2 .jpg

பிரதமர் மோடியின் சென்னை பயணத்திட்டம்!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் தமிழ்நாடு வந்து செல்கிறார். இந்த ஆண்டில் ஏற்கனவே அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டைக்கு முன்னர் தமிழ்நாடு வந்தவர் பின்னர் அரசு நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சிகளுக்கு இரண்டு நாள் பயணமாக திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு வருகை தந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் தமிழ்நாடு வருகிறார். இன்று மாலை சென்னை வரும் பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் கல்ப்பாக்கம் சென்று அங்கு புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் சென்னையில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

மகாராஷ்டிராவில் இருந்து வரும் பிரதமர் மோடி பிற்பகல் 2.45 மணிக்கு சென்னை வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3.20 மணிக்கு கல்பாக்கம், செல்கிறார்

அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மாலை 4.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம் வருகிறார்.

பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும் அவர், மாலை 6.15 மணிக்கு கார் மூலம் சாலை மார்க்கமாக விமான நிலையம் வந்து, அங்கிருந்து ஹைதராபாத் செல்கிறார்.

இதன்காரணமாக சென்னையில் இன்று போக்குவரத்தில் மாற்றங்கள் இருக்கும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *