`MP, MLA-க்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு பேசினாலும் குற்றம்தான்..!’ – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு | MPs/ MLAs cannot claim immunity from prosecution

Vikatan 2024 02 199ee547 4b5f 403d 8fb2 6775282280f0 64e8214302469.avif .png

இந்த நிலையில், அவையில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாக்களித்தாலும், பேசினாலும் குற்றம்தான் எனவும், அரசியலமைப்பு பிரிவுகளின்படி விலக்கு அளிக்க முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.

இதுகுறித்து 7 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில், “அவையில் வாக்களிக்க அல்லது பேசுவதற்காக லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் எம்.பி/எம்.எல்.ஏ-க்களுக்கு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதிலிருந்து விலக்கு அளிக்கும் பி.வி.நரசிம்மா ராவ் வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பரவலான தாக்கங்களைக் கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யாமல், அதிலிருக்கும் தவறை இந்த நீதிமன்றம் நீடிக்க அனுமதிப்பது பெரும் ஆபத்து.

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட்

எனவே, நரசிம்மராவ் வழக்கின் தீர்ப்பை நங்கள் ஏற்கவில்லை. மேலும், எம்.பி/எம்.எல்.ஏ-க்களுக்கு விலக்கு அளிக்கும் இந்தத் தீர்ப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், இதனை நாங்கள் ரத்து செய்கிறோம். பிரிவு 105 (2), 194 (2)-ன் கீழ் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ பேசுவது உள்ளிட்ட எந்தவொரு செயலிலும், உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் விலக்கு என்பது அவையின் கூட்டு செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *