முதல்வர் ஸ்டாலினை வரவேற்று திமுக நிர்வாகி கொடுத்த விளம்பரம்; விமர்சனத்துக்குள்ளானதன் பின்னணி என்ன? | dmk cadres advertisement creates controversy what happened?

6dbae607 1f37 4413 Abe3 Fc67baf97d2f.jpg

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் மடம் பழமையானது. இந்த மடத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருக்கிறார். இந்நிலையில் ஆதீனம் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதை வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என தங்களை மிரட்டுவதாகக் கூறி, ஆதீனத்தின் சகோதரரர் விருத்தகிரி, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தி.மு.க ஒன்றிய செயலாளர் விஜயகுமார் கொடுத்துள்ள விளம்பரம்

தி.மு.க ஒன்றிய செயலாளர் விஜயகுமார் கொடுத்துள்ள விளம்பரம்

அதில் ‘பா.ஜ.க-வின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஆடுதுறை வினோத், மடாதிபதியின் நேர்முக உதவியாளர் செந்தில், திருவெண்காட்டைச் சேர்ந்த பா.ஜ.க முன்னாள் ஒன்றிய தலைவர் விக்னேஷ், செம்பனார் கோயிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம், அ.தி.மு.க பிரமுகரான மதுரை செய்யூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், தி.மு.க.வின் செம்பனார் கோயில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.விஜயகுமார், திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் மிரட்டினர்” எனத் தெரிவித்திருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *