”போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க மத்திய உளவுத்துறை தவறிவிட்டது” – செல்வப்பெருந்தகை | The Central Intelligence Agency has failed to stop the drug movement”- Selvaperunthakai

Selva Perunthagai Mla.jpg

போதைப் பொருட்கள், மத்திய அரசின் உளவுத்துறை, ரா போன்ற துறைகளில் கட்டுப்பாடுகளை மீறி குஜராத், ஆந்திரா, தமிழகம் என அனைத்து பகுதிகளுக்கும் வருகிறது என்றால் இதற்கு பா.ஜ.க தான் காரணம். பா.ஜ.க எல்லா மாநிலங்களையும் போதை பழக்கங்கள் உள்ள மாநிலமாக மாற்றுவதற்காக முயற்சி செய்கிறார்கள்.  பா.ஜ.க., கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று கூறியது இதுவரை எத்தனை பேருக்கு கொடுத்துள்ளார்கள்?  

செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உயரும் என்றது, ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் வரவு வைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்தது.   எந்த வாக்குறுதியையும்  நிறைவேற்றவில்லை. ஜி.எஸ்.டி வரி வசூலில்  தமிழகத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்யாதது ஏன்?   ஊழலில் தளைத்துள்ள  பா.ஜ.கவினருக்கு ஊழலைப் பற்றி பேச அருகதை  கிடையாது.” என்றார்.

 Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *