`பிரதமர் மோடி இந்துவே அல்ல!’ – சரமாரியாகச் சாடிய லாலு பிரசாத் யாதவ் | PM Modi is not hindu, bihar former CM Lalu prasad yadav slams

Gridart 20240304 122245947.jpg

மல்லிகார்ஜுன கார்கே, சீதாராம் யெச்சூரி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் என இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய லாலு பிரசாத் யாதவ், “இந்து மக்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களின் மரணத்தால் வேதனைப்படுகிறார்கள். அப்படியிருக்க, தாய் மறைவுக்குப் பிறகுகூட மொட்டையடிக்காத, தாடியெடுக்காத பிரதமர் மோடி இந்துவே அல்ல.

லாலு பிரசாத் யாதவ்

லாலு பிரசாத் யாதவ்

நாட்டில் வெறுப்புணர்வை மோடி பரப்பி வருகிறார். மேலும், அவர் எப்போதும் வாரிசு அரசியலைப் பற்றிப் பேசுகிறார். எனவே, வாரிசு அரசியல் என்றால் என்ன என்பதையும், தனக்கு ஏன் குழந்தைகள் இல்லை என்பதையும் மோடி விளக்க வேண்டும்” என்று சாடினார்.

ஜன் விஸ்வாஸ் மஹா பேரணி - பீகார் - RJD

ஜன் விஸ்வாஸ் மஹா பேரணி – பீகார் – RJD

அதையடுத்து, நிதிஷ் குமாரைச் சாடிய லாலு பிரசாத் யாதவ், “முன்பு அவர் எங்களுடனான கூட்டணியை முறித்தபோது அவரை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யவில்லை. வெறுமனே, பல்டி மாமா என்று மட்டுமே அவரை அழைத்தோம். பின்னர், நாங்கள் மீண்டும் அதே தவறை செய்தோம் (மீண்டும் கூட்டணியமைத்தது), தேஜஸ்வியும் அதே தவறை செய்தார். ராஜ்பவனில் ஏதோ நடக்கிறது என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால், முந்தைய அரசில் எந்தத் தவறும் இல்லை… அவருக்கு வெட்கமாக இல்லையா…” என்றார்.

அவரைத் தொடர்ந்து பா.ஜ.க-வைச் சாடிய தேஜஸ்வி யாதவ், “பா.ஜ.க தற்போது ஒவ்வொரு கட்சியினரின் கழிவுகள் சேரும் குப்பைத் தொட்டியாக மாறிவிட்டது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *