`திமுக ஆட்சியில் தமிழகம், போதை மாநிலமாகத் தள்ளாடுகிறது!’ – திண்டுக்கல் சீனிவாசன் தாக்கு | Dindigul Srinivasan slams dmk government in dindigul

Img 20240304 Wa0034.jpg

அவரைத் தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், “தி.மு.க., ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்தும் போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள்கள் விற்பனை செய்வதற்கு தி.மு.க., நிர்வாகிகளே துணை போவதால், போலீஸார் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன்

ஆர்ப்பாட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன்

எப்போதெல்லாம் தி.மு.க., ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் இளைய தலைமுறையினர் சீரழிந்து வருகின்றனர். கள்ள மதுபானம் விற்பதற்கு லைசன்ஸ் கொடுத்ததுபோல தி.மு.க.,வை சேர்ந்த நிர்வாகிகள் பகுதி, ஏரியா வாரியாக பிரித்து விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சமூக விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *