“தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை!” – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு | RB Udhayakumar speech at madurai admk protest

Whatsapp Image 2022 07 02 At 1 01 05 Pm 1 .jpeg

ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “தமிழக மக்களின் நலனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் ஒரே கட்சி அ.தி.மு.க மட்டுமே. போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து உலக அளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெற்று தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி கூறிய அறிவுரைகளை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டிருந்தால், எந்த ஒரு பிரச்னையும் ஏற்பட்டிருக்காது, தி.மு.க-வின் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேரிடர் நிதியை வழங்க வலியுறுத்தி ராஜினாமா செய்திருக்க வேண்டாமா?

ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

அ.தி.மு.க சார்பில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்திருந்தால், அனைவரும் ராஜினாமா செய்திருப்போம், பேரிடர் நிதியை கொடுத்த பிறகு தமிழகத்திற்கு வாருங்கள் என பிரதமரிடம் வலியுறுத்தியிருப்போம்.

காவிரி விவகாரத்தில் தி.மு.க அரசு தோல்வி அடைந்திருக்கிறது, தமிழ்நாட்டுக்கு நிதி வழங்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை, மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெற தி.மு.க அரசுக்கு தகுதி இல்லை” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *