குமரி: அதிமுக முன்னிலைப்படுத்திய பசிலியான் நசரேத் போட்டியிலிருந்து விலகல்? – பின்னணியில் நடந்ததென்ன? | kanniyakumari lok sabha election admk candidate update

65bd6383a2549.jpg

இந்த நிலையில், ‘போதைப்பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்படுத்திய தி.மு.க-வைக் கண்டித்து’ என்ற தலைப்பில் இன்று நாகர்கோவிலில் நடந்த அ.தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் பசிலியான் நசரேத் கலந்துகொள்ளாமல், ஆப்சென்ட் ஆனார். பசிலியான் நசரேத் நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்தது ஏன் என கட்சியினரிடையே விசாரித்தோம். “மீனவர்களின் வாக்குகள் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்குத்தான் மொத்தமாகச் செல்லும் என்பதால், அந்தக் கூட்டணி வேட்பாளர் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்று வருகிறார். பசிலியான் நசரேத் போட்டியிட்டால் மீனவர் வாக்குகளை அவர் பிரித்துவிடுவார். அது பா.ஜ.க வேட்பாளரின் வெற்றிக்கு வழிவகுத்துவிடும் என, பசிலியான் சார்ந்திருக்கும் சிறுபான்மை அமைப்பின் நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். முதலில் பசிலியான் பணியவில்லை. ஆனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் மூலம் வலியுறுத்தி பேசியதைத் தொடர்ந்து, அவர் போட்டியிலிருந்து பின்வாங்கியிருக்கிறார். எனவே அ.தி.மு.க சார்பில் வேறு வேட்பாளரை நிறுத்த தலைமை ஆலோசித்து வருகிறது” என்றனர்.

தளவாய் சுந்தரம், பசிலியான் நசரேத்

தளவாய் சுந்தரம், பசிலியான் நசரேத்

இது சம்பந்தமாக விளக்கம் கேட்க பசிலியான் நசரேத்தின் மொபைலில் பலமுறை தொடர்புகொண்டபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை. இது குறித்து அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ-விடம் பேசினோம், “பசிலியான் அவராகத்தான் பிரசாரம் செய்துவந்தார். அவரை வேட்பாளராக அறிவிக்கவே இல்லை. ஆனாலும், போட்டியிடுவது குறித்து அவரின் மகன் உள்ளிட்டவர்களிடம் ஆலோசித்துவிட்டுச் சொல்வதாகக் கூறியுள்ளார். நேற்றே எடப்பாடியாரைச் சந்திக்கச் செல்வதாகக் கூறிவிட்டு சென்னைக்குச் சென்றுள்ளார். மற்றபடி வேறு என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *