கல்பாக்கம் ஈனுலை திட்டம்: `தமிழர்கள் மீது ஒன்றிய அரசு தொடுக்கின்ற சூழலியல் போர்’ – கொதித்த சீமான் | NTK Chief Seeman emphasis BJP led central govt should abandon prototype fast breeder reactor at kalpakkam

Whatsapp Image 2024 01 15 At 09 28 52 1 .jpeg

இதுகுறித்து சீமான் தனது அறிக்கையில், “சென்னை கல்பாக்கத்திலுள்ள அணுவுலை வளாகத்தில் புதிதாக 500 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மாதிரி அதிவேக ஈணுலையை (Prototype Fast Breeder Reactor) பிரதமர் மோடி துவக்கி வைப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பாதுகாப்பற்ற திரவ சோடியத்தைக் குளிர்விப்பானாகக் கொண்ட ஈணுலைகள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால், அதைத் தொடங்கிய நாடுகளே கைவிட்டுவிட்ட நிலையில் பா.ஜ.க அரசு அதனை இந்தியாவில் முதல் முறையாகத் தமிழ்நாட்டில் தொடங்குவது தமிழர்களை அழித்தொழிக்கவே வழிவகுக்கும்.

1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் ஓர் அணு உலையில் சராசரியாக வெளியாகும் 27,000 கிலோ எடையுள்ள அணுக்கழிவுகள் அணு உலைக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை 7 ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கு வைத்திருக்க முடியும். அதன்பிறகு, அங்கிருந்து வெளியேற்றி தற்காலிக அணுக்கழிவு மையத்துக்கு (Away From Reactor-AFR) கொண்டு செல்ல வேண்டும். இத்தகைய அணுக்கழிவுகள் ஏறத்தாழ 48,000 ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மையுடன் இருக்கக்கூடியவை. இக்காலகட்டத்துக்குள் ஏதாவது ஒரு பேரிடர் ஏற்பட்டு அணுக்கழிவுகளின் கதிர்வீச்சுகள் வெளிப்பட்டால் தமிழ்நாடு மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்க நேரிட்டு, உயிர்கள் வாழவே தகுதியற்ற நிலமாக தமிழ்நிலம் மாறிவிடும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *