கட்சி… கொடி… கூட்டணி! EP01 திரிணாமுல் காங்கிரஸ்: அடித்தளத்திலிருந்து அரியணைக்கு..! | Story of mamata banerjee and her party TMC history

Whatsapp Image 2024 03 04 At 12 11 22.jpeg

சிங்கூர், நந்திகிராம் சம்பவங்களின் வீச்சுடன் 2009-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்த மம்தா 19 இடங்களில் வென்றார். மன்மோகன் சிங் அமைச்சரவையில் மீண்டும் அவருக்கு ரயில்வே அமைச்சர் பதவி கிடைத்தது.  பதவியில் இருந்துகொண்டே 2011 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்த மம்தா, 227 இடங்களில் வெற்றுபெற்று 34 ஆண்டுகளாக மேற்குவங்கத்தின் அதிகார பீடத்திலிருந்த இடது முன்னணி அரசை வீட்டுக்கு அனுப்பினார். அந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டும் 184 இடங்களை வென்றது. மேற்கு வங்காளத்தில் முதல் பெண் முதலமைச்சராகப் பதவியேற்றார் மம்தா பானர்ஜி! 

திரிணாமுல் காங்கிரஸ் | மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் | மம்தா பானர்ஜி

தொடர்ந்து வந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 42 இடங்களில் 34 இடங்களை வென்றது திரிணாமுல் காங்கிரஸ். அதோடு, மணிப்பூர், திரிபுரா, ஜார்கண்ட், அசாம், மேற்கு வங்கம் என ஐந்து மாநிலங்களிலும் போட்டியிட்டு 6 சதவிகித வாக்குகளைப் பெற்று தேசியக் கட்சி எனும் அந்தஸ்தையும் பெற்றது. 2016 செப்டம்பரில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸை தேசியக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்தது. தற்போது 13 மாநிலங்களில் மம்தாவின் கட்சி தீவிர அரசியலில் ஈடுபட்டுவருகிறது. மூன்றாவது முறையாக மேற்கு வங்க மாநில முதலமைச்சராகப் பொறுப்பு வகித்துவருகிறார் மம்தா. 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *