“எத்தனை முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வந்தாலும் மாற்றம் வராது..!” – கார்த்திக் சிதம்பரம் | karti chidambaram talks about modi TN visit

Karthik Chidambaram 2.jpg

விலைவாசி கூடியதற்கு குழப்பமான ஜி.எஸ்.டி தான் காரணம். பிரதமர் என்பதால் எத்தனை முறை வேண்டுமென்றாலும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் பிரதமர் மோடி செல்லலாம். அது அவரது உரிமை. அந்தப் பயணம் எந்த ஒரு பயனும் இல்லாத பயணமாக தான் நான் பார்க்கிறேன். திருப்பூரில் பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடியை வைத்து நடத்திய கூட்டம் கூட அவர்களுக்கு வெற்றியை தரவில்லை. இவர்கள் சேர்வார்கள் அவர்கள் சேர்வார்கள் என்றெல்லாம் கூறினார்கள். கடைசியில் யாரும் சேரவில்லை. வந்த கூட்டம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்…அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்தக் கூட்டத்திற்கு சென்றவர்கள் தமிழ்நாட்டில் வாக்காளர்களாக இருக்கிறார்களா என்பது சந்தேகமாக உள்ளது. பிரதமர் மோடி ரூ. 15 லட்சம் கொடுப்பது எவ்வாறு ஒத்திவைத்தார்களோ அதே போல் தான் பிற கட்சிகளில் இருந்து சேர்வார்கள் என்பதையும் ஒத்தி வைத்துள்ளார்கள். அம்பானியின் இல்ல திருமண விழாவிற்கு ஏர்போர்ட் வழங்கியதன் மூலம் இந்த அரசின் பார்வை, கொள்கை என்ன என்பது அனைவருக்கும் தெரிய வருகிறது.

கார்த்திக் சிதம்பரம்

கார்த்திக் சிதம்பரம்
தே.தீட்ஷித்

இந்த முக்கியத்துவத்தை மதுரையில் உள்ள விமான நிலையத்திற்கு தர வேண்டும் என்று கேட்டால் அது கமர்சியல் ரிசீசன் என்று கூறினார்கள். 370 சீட்டுகளை பெறுவோம் என்று எண்ணுவது அகண்ட பாரதத்தில் வேண்டுமென்றால் அவர்களது ஆசை நிறைவேறும். அகண்ட பாரதம் என்பதால் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் இது எல்லாம் அகண்ட பாரதத்தில் அடங்கும். அங்கெல்லாம் தேர்தல் நடந்து அதை அனைத்தையும் சேர்த்தால் அவ்வளவு சீட்டுகளை பா.ஜ.க வாங்கலாம். பா.ஜ.க ஆசைப்படுவது பேராசை…அல்பாசை. கட்சிக்குள் ஒருவருக்கு சீட் வேண்டும்…வேண்டாம் என்று சொல்வது இயல்பு தான். ஆனால், யாருக்கு சீட்டு வழங்க வேண்டும் என்று கட்சி தலைமை முடிவு செய்து அறிவிக்கும். மூன்று முறை காங்கிரஸில் இடம் ஒதுக்கி எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி பா.ஜ.க-வில் இணைந்தது வருத்தம் அளிப்பதாகத் தான் உள்ளது. ஆனால், இந்த சமயத்தில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு செல்வது வாடிக்கை தான்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *