40 ஆண்டுகளுக்குப் பின் மகப்பேறு விடுப்பு பணப் பலன்: கர்நாடக மின்வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவு! | Karnataka high court orders BESCOM to pay maternity leave benefit to woman in 40 year old case

High Court Ka.jpg

இதற்கான உத்தரவை, கர்நாடக உயர் நீதிமன்ற தனி நீதிபதி சச்சின் சங்கர் மகடம் அமர்வு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி பிறப்பித்தது. அதில், “குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைக்க, மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் நோக்கம் சிறந்ததுதான். இதில், பெண்களுக்கு மேற்கொள்ளப்படும் டியூபெக்டெமி மற்றும் ஆண்களுக்கு மேற்கொள்ளப்படும் வாசெக்டெமி போன்ற கருத்தடை அறுவை சிகிச்சைகளுக்கு இடையே மிகப் பெரிய அளவில் வேறுபாடுகள் ஏதும் இல்லை. ஆனாலும், 2014-ல் மனுதாரர் ஓய்வு பெறும் வேளையில், தனது பேறுகால நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரியபோது, மின்வாரியம் அதனை ஏற்க மறுத்தது நியாயமற்றது.

கர்நாடக உயர் நீதிமன்றம்

கர்நாடக உயர் நீதிமன்றம்

அரசு இந்தத் திட்டங்களின் நோக்கம் மற்றும் தேவையைக் கருத்தில் கொண்டும், அரசுப் பணியில் மனுதாரரின் நீண்ட கால சேவையைக் கவனத்தில் கொண்டும், அவருக்கு இந்த மகப்பேறு விடுப்புக்குண்டான பணப்பலன்களை, அவரின் ஓய்வு கால நிதியுடன் சேர்த்து வழங்கியிருக்க வேண்டும். ஆனால், மனுதாரரின் பணிக்காலம் முழுவதும் இதுதொடர்பாக எந்தவித முடிவுகளும் எடுக்காமல், ஓய்வு பெற்ற பிறகும், 1983-ம் ஆண்டு வழங்கிய மகப்பேறு விடுமுறைக்கான பணப்பலன்களை விடுவிக்க மறுப்பது மனுதாரரை மனதளவில் வெறுமையடையச் செய்வதோடு, அவரை ஒரு கஷ்டமான சூழலில் ஆழ்த்திவிடும்.

நீதிமன்ற உத்தரவு

நீதிமன்ற உத்தரவு

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *