வேட்பாளர் பட்டியல் வெளியான மறுநாளே போட்டியிட மறுப்பு தெரிவித்த பாஜக வேட்பாளர் – பின்னணி என்ன?! | BJP candidate back step from contest in election a day after candidate list released

Gridart 20240303 144400868.jpg

இந்த 195 வேட்பாளர்களில் 28 வேட்பாளர்கள் பெண்கள், 47 வேட்பாளர்கள் 50 வயதுக்குட்பட்டவர்கள். அதோடு, தற்போது எம்.பி-யாக இருக்கும் 33 பேர் இந்த வேட்பாளர் பட்டியலிலிருந்து கழட்டிவிட்டு, புதிய முகங்களை பா.ஜ.க களமிறக்கியிருக்கிறது. இந்த நிலையில், பா.ஜ.க-வின் இந்த வேட்பாளர் பட்டியலில், மேற்கு வங்கத்தின் அன்சோல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த போஜ்புரி பாடகர் பவன் சிங், தேர்தலில் போட்டியிடவில்லை தெரிவித்திருக்கிறார்.

போஜ்புரி பாடகர் பவன் சிங்

போஜ்புரி பாடகர் பவன் சிங்

இதுகுறித்து பவன் சிங் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “பாஜக தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக என்னை நம்பி அசன்சோல் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. ஆனால், சில காரணங்களால் என்னால் அசன்சோல் தொகுதியில் போட்டியிட முடியாது” என்று தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும், பா.ஜ.க இவரை நேற்று வேட்பாளராக அறிவித்ததையடுத்து, பெண்களைப் பற்றிய ஆட்சேபனைக்குரிய குறிப்புகளுடன் இவரின் பாடல் தொகுப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் தேர்தலில் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படும் என்று பா.ஜ.க அவரை நீக்கத் திட்டமிட்டதால் அவரே போட்டியிட மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *