“முதலில் 3-ஐ தாண்டட்டும்… பிறகு 30 சதவிகித்தை தாண்டலாம்..!" – பாஜக-வை விமர்சித்த அமைச்சர் ரகுபதி

Ragupathi .jpg

தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பிறந்த குழந்தைகளுக்கு மோதிரத்தை அணிவித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,

“எதிரிகளை பலவீனமாக எடை போட மாட்டோம். ஆனால், அதே நேரத்தில் எங்களுடைய சக்தி என்ன என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாடு முதலமைச்சருக்கும் நன்றாக தெரியும். தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் தி.மு.க-வை எந்த ஒரு சக்தியாலும் அழித்துவிட ஒழித்து விட முடியாது. அந்த சக்தி இந்திய அரசியலில் யாருக்கும் கிடையாது. தமிழ்நாடு மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ள கட்சிதான் தி.மு.க. சொல்பவர்கள் என்ன வேண்டுமானாலும் கண்ணை மூடி சொல்லிக் கொண்டு இருக்கலாம். நடப்பதை தான் பார்க்க வேண்டும்.

முதலில் மூன்று சதவிகிதத்தை பா.ஜ.க ஓட்டு வங்கியில் தாண்டட்டும். அப்புறம் 30 சதவிகிதத்திற்கு போகலாம். ஆயிரம் கைகள் மறைத்து இருந்தாலும் உதயசூரியனை மறைக்க முடியாது. தமிழ்நாட்டில் மறைக்க முடியாத சக்தி தான் தி.மு.க. எங்கள் எம்.பி-க்கள் மக்களுடன் தான் இருக்கிறார்கள். அவர்களது எம்.பி-க்கள் காணாமல் போனதை தற்பொழுது மக்களுக்கு சுவரொட்டி மூலம் நினைவுபடுத்தி வருகின்றனர். எங்கள் எம்.பி-க்களை எப்போதும் பார்க்கலாம். அவர்களது எம்பிக்கள் காணாமல் போனதால் தற்பொழுது சீட்டு கொடுப்பதற்காக காணவில்லை என்று சுவரொட்டி மூலம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய வெற்றியை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பெற்றவர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு மக்கள் இதயங்களில் இருக்கக்கூடியவர் அவர். அவரது உழைப்பு என்பது தி.மு.க தொண்டர்களாலும், தமிழ்நாடு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று.

அமைச்சர் ரகுபதி

அண்ணாமலை போன்றவர்கள் அதை மூடி மறைக்க முயன்றாலும், உதாசீனப்படுத்தினாலும், மக்கள் இதயத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு தனி இடம் இருக்கிறது. பா.ஜ.க-வில் பல்வேறு வழக்கில் தொடர்புடையவர்களை தெரிந்து சேர்க்கின்றனர். ஆனால், தி.மு.க 2 கோடி உறுப்பினர்களை வைத்துள்ள மிகப்பெரிய இயக்கம். நாங்கள் ஒவ்வொருவரையும் பூதக்கண்ணாடி வைத்து அவர்களது குணாதிசயங்கள் என்ன என்பதை பார்க்க முடியாது. எங்களது கவனத்தில் தவறு செய்தார்கள் என்று வந்துவிட்டால் தி.மு.க எந்த குற்றவாளியையும் சேர்க்காது… அனுமதிக்காது. அதற்கு உறுதுணையாகவும், உடனடியாகவும் இருக்காது. தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இழுபறி என்று சொல்வதெல்லாம் வெளியே சொல்லும் புரளிகள் தான். கூட்டணியில் உள்ள பேச்சுவார்த்தை அனைத்தும் சுமுகமாக போய்க் கொண்டுள்ளது. அது நாடறிந்த விஷயம். தி.மு.க கூட்டணியில் உள்ளவர்களிடம் பிரச்னையை ஏற்படுத்தி இந்த கூட்டணியில் உள்ளவர்களை அழைப்பவர்கள் அழைத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

அண்ணா அறிவாலயம்

எங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் தோழமைக் கட்சி, தோழமையாக இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய காங்கிரஸ் தலைவர்களும் தி.மு.க மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள். எங்களைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி உருவாக அடிப்படையாக இருந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர். மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

அதனால்தான், தி.மு.க-வே இருக்காது என்று பேசக்கூடிய அளவிற்கு பிரதமர் மோடி தரம் தாழ்ந்து வந்திருக்கிறார். அவர் வந்தது இந்தியா கூட்டணியின் வெற்றியை காட்டுகிறது. பாராளுமன்ற தேர்தலில் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் சுற்றிச்சூழன்று உதயநிதி ஸ்டாலின் பணியாற்றி வெற்றியைப் பெற்று தருவார். ” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *