`பாஜக தோற்கடிக்கப்படாவிட்டால் பழங்குடியினர் வேரோடு பிடுங்கியெறியப்படுவார்கள்’ – ஜார்க்கண்ட் முதல்வர்

Ghk Qdxoaas7ir.jpeg

பிரதமர் மோடி இரண்டு நாள்களுக்கு முன்பு, பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்துக்குச் சென்றிருந்தார். அங்கு ரூ.35,700 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், காங்கிரஸும், மாநில ஆளுங்கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் பழங்குடியினரை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்ப்பதாகவும், பழங்குடியினரின் எதிர்காலம் தனது உத்தரவாதம் என்றும் கூறியிருந்தார்.

பிரதமர் மோடி

இந்த நிலையில், மாநிலத்தின் புதிய முதலமைச்சர் சம்பாய் சோரன், பா.ஜ.க தோற்கடிக்கப்படாவிட்டால் பழங்குடியினர் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வேரோடு தூக்கியெறியப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறார்.

பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கிய ஏழு நாள் பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று சட்டமன்றத்தில் உரையாற்றிய சம்பாய் சோரன், “வன உரிமைச் சட்டத்தில் பா.ஜ.க அரசு திருத்தங்களைச் செய்திருக்கிறது. அதன்கீழ் கிராம சபையின் அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நிலக்கரி தாங்கும் பகுதிகள் (கையகப்படுத்துதல் மற்றும் மேம்பாடு) சட்டம் மற்றும் சோட்டாநாக்பூர் குத்தகை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன்

காடு, நிலக்கரி தாங்கும் பகுதிகள் மற்றும் பிற இடங்களிலிருந்து, பழங்குடியினரை மூலோபாய ரீதியாகத் திருத்தங்கள் மூலம் வெளியேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. எனவே, வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.க-வை தோற்கடிக்கப்படாவிட்டால், பழங்குடியினர் தங்கள் நிலத்திலிருந்து வேரோடு பிடுங்கப்படுவார்கள்” என்று கூறினார். முன்னதாக, நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31-ம் தேதி இரவு அப்போதைய முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைதுசெய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *