'உண்மை தெரிந்து பேசுங்கள்..!' – சின்னம் விவகாரத்தில் சீமானுக்கு அண்ணாமலை பதில்

Whatsapp Image 2022 04 14 At 4 48 13 Pm 1 .jpeg

கோவை விமானநிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2013-ம் ஆண்டு இதேபோல  போதை மருந்து கடத்திய வழக்கிலும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அன்றைக்கு பிடிபட்டது வெறும் 20 கிலோ. 11 ஆண்டுகளில் ரூ.2,000 கோடிக்கு 3,500 கிலோ போதை மருந்து கடத்தும் இன்டர்நேஷனல் கிரிமினலாக உருவாகியுள்ளார்.

அண்ணாமலை

வெளியில் வந்தவரை காவல்துறை முறையாக கண்காணிக்கவில்லை. டிஜிபியிடம் அவார்டு வாங்குவது, முதல்வர்,  உதயநிதி ஆகியோருடன் புகைப்படம் எடுப்பது, சினிமா துறையில் கம்பெனி நடத்துவது என்று வேறு பிம்பத்தை கட்டமைத்துவிட்டார்.

சீமான் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் அந்த சின்னம் அவருக்காக காத்திருக்கும். அவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. சீமானுக்கு ஒரு சின்னம் வேண்டுமென்றால் அவர் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை வெள்ளத்தால் விண்ணப்பிக்க மறந்துவிட்டேன் என்கிறார். அண்ணாமலையா அவர் வீட்டுக்கு சென்று கையைப்பிடித்து விண்ணப்பிக்க வேண்டாம் என்று சொன்னது.

சீமான்

யார் முதலில் செல்கிறார்களோ அவர்களுக்குத்தான் சின்னம் கிடைக்கும். அதைத்தான் டெல்லி உயர் நீதிமன்றமும் சொல்லியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன தகுதி வேண்டும் என சீமானுக்கு தெரியுமா. இதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் சீமான் என் மீது பழிபோடுகிறார். அவர் உண்மையை தெரிந்துகொண்டு பேசவேண்டும்.

தமிழ்நாட்டில் மக்களுக்காக பணியாற்றிய பல தலைவர்கள் பற்றி பேசியுள்ளோம். பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் திருச்சி வந்தபோது தேமுதிக விஜயகாந்த் குறித்தும் பேசியுள்ளார். ராஜாஜி, காமராஜர் குறித்தும் பேசியிருக்கிறார். இது அரசியலுக்காக இல்லை. மற்ற கட்சிகள் பேசிக்கொண்டே இருக்கட்டும். அவர்களின் வாக்குவங்கி கரைகிறது.

பிரதமர் மோடி

இந்தத் தலைவர்களின் பாதையில், தற்போது அவர்களின் கட்சியே செல்வதில்லை என்பது அவர்களுக்கு தெரியும். அந்த ஆத்திரத்தில் எங்களை விமர்சிக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் எனக்கு பணிகள் இருக்கிறது. எனக்கு விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை. பிரதமர் மோடியின் முடிவுக்கு கட்டுப்படுவேன்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *