Ghana: LGBTQIA+ என அடையாளம் காணப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை – உரிமையை பறிக்கும் சட்டம்! |Ghana passes bill making identifying as LGBTQ+ illegal

Jose Pablo Garcia Itoyjibfwhy Unsplash.jpg

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா நாட்டில் LGBTQ+ என அடையாளம் காணப்பட்ட எவருக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் கடினமான புதிய மசோதா நாடாளுமன்றத்தில் புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

2021-ல் ஏற்கெனவே `Human Sexual Rights and Family Values Bill’ என்ற மசோதா முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சட்டமாக இயற்றப்படுவதற்கு தற்போது கானாவின் ஜனாதிபதி நானா அகுஃபோ – அடோவின் கையொப்பம் மட்டுமே தேவைப்படுகிறது. 

jail

jail
representational image

இந்த மசோதா சட்டமாக மாற்றப்பட்டால் ஒருபாலீர்ப்பு கொண்டவர்கள், இருபாலீர்ப்பு கொண்டவர்கள், மாற்றுப் பாலினத்தவர், ஊடுபால், பால்புதுமையர், அல்பாலீர்ப்பாளர்கள் என அடையாளம் காணப்படுவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதோடு LGBTQ+ குழுக்களை உருவாக்குவதற்கும் அல்லது நிதியளிப்பதற்கும் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *