Tamil News Live Today: முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை!

Whatsapp Image 2024 03 01 At 08 58 47 1 .jpeg

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் – அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி காலை 8 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துனர். மேலும் சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார் முதல்வர் ஸ்டாலின். கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தலைவர்களும் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *