“43 வழக்குகள்… அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீங்கள் பிஸிதான்!” – ஷாஜஹான் ஷேக் வழக்கறிஞரிடம் நீதிமன்றம் | Sheikh Shahjahan has 43 cases against him, he will keep you busy, calcutta high said to his lawyer

Ghemthuwaaaccl .jpeg

இந்த நிலையில், ஷாஜஹான் ஷேக் ஜாமீன் கோரிய மனு கொல்கத்தா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், ஷாஜஹான் ஷேக்கின் வழக்கறிஞர், “என் மனுதாரருக்கு எதிராக உங்கள் நீதிபதிகளால் சில அவதானிப்புகள் செய்யப்பட்டன” என்று கூறினார். அப்போது, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம், “உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். மிஸ்டர் வழக்கறிஞர்… ஷாஜகான் ஷேக் மீது சுமார் 43 வழக்குகள் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் உங்களை பிஸியாக வைத்திருப்பார். குறைந்தபட்சம் அடுத்த 10 ஆண்டுகள் வரை அவரது அனைத்து வழக்குகளையும் நீங்கள்தான் கையாள நேரும்” என்று கூறினார்.

கொல்கத்தா உயர் நீதிமன்றம்

கொல்கத்தா உயர் நீதிமன்றம்

அதைத்தொடர்ந்து, ஷாஜஹான் ஷேக்கின் ஜாமீன் மனுவை வாசித்த வழக்கறிஞர், “எனது (ஷாஜகான்) முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. நேற்று அதிகாலை நான் கைது செய்யப்பட்டேன். அதனால் தற்போது அமர்வுக்கு என்னால் வர முடியவில்லை” என்றார். அதற்கு, “தயவுசெய்து திங்கட்கிழமை வாருங்கள், இப்போது வேண்டாம். அவர் மீது எங்களுக்கு எந்த அனுதாபமும் இல்லை” என்று தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *