மோடி வீட்டில் விடிய விடிய நடந்த ஆலோசனை; 100 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டார்களா? – என்ன நடந்தது?

336aa6e2 7558 4a2e B1f2 Abdf23f0959c.jfif .png

மக்களவைத் தேர்தலுக்கு பா.ஜ.க முழு வேகத்தில் தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்துக்கொண்டுள்ளது. இதில் மம்தா பானர்ஜி மட்டும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு செய்துகொள்ள மறுத்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு பிரதமர் நரேந்திர மோடி வீட்டில் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நட்டா, அமித் ஷா மற்றும் பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். இரவு 11 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டம், இன்று காலை 4 மணிக்கு முடிவுக்கு வந்தது. இதில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் குஜராத்திற்கு வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் கேரளா மற்றும் தெலங்கானா மாநிலங்கள் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. எனவே கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அந்த மாநில வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப்பில் அகாலி தளத்துடனும் கூட்டணிக்கு பா.ஜ.க முயன்று வருகிறது.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படும் முன்பாக இம்மாதம் 10-ம் தேதிக்குள் 50 சதவிகித வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட வேண்டும் என்பதில், பா.ஜ.க தலைவர்கள் தீவிரமாக இருக்கின்றனர். கடந்த 2019-ம் ஆண்டும் இதே போன்று பா.ஜ.க வேட்பாளர்களை அறிவித்தது. இதில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா பெயர் அடங்கிய முதல் பட்டியல் இன்று அல்லது நாளைக்குள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதல் பட்டியலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜோதிராதித்ய சிந்தியா, நிதின் கட்கரி ஆகியோரின் பெயர்களும் அடிபடுகிறது.

இம்முறை பெண் துறவி பிரக்யா சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காது என்று தெரிகிறது. அவருக்கு பதில் அவரது தொகுதியில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று வசுந்தராவிற்கும் வாய்ப்பு இல்லை என்று பா.ஜ.க தலைவர்கள் கூறிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. முதற்கட்டமாக இந்தி பேசும் மக்கள் அதிகமுள்ள பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது.

தென்மாநிலங்களில் கட்சி பலவீனமாக இருப்பதால், வடமாநிலங்களில் கூடுதல் தொகுதியில் வெற்றி பெறவேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணிக்கு வரத் தயாராகவே இருக்கிறது. எனவே அக்கட்சியுடன் பா.ஜ.க கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் ஏற்கெனவே பா.ஜ.க கூட்டணியில் இரண்டு கட்சிகள் சேர்ந்து இருப்பதால் பிரச்னை இல்லை. இந்தியா கூட்டணியில் இம்முறை காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரப்பிரதேசத்திலிருந்து போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. அதிகமாக அவரின் தாயார் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *