“மக்களும், தொண்டர்களும் விரும்பினால் ஓ.பி.எஸ் தேனியில் போட்டியிடுவார்!” – ரவீந்திரநாத் எம்.பி

Img 20180217 Wa0003.jpg

தேனி – மதுரை ரோட்டில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலையம் அருகே சாலை அமைக்கும் பணியை தேனி எம்.பி ரவீந்திரநாத் பார்வையிட்டார். அப்போது ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரனுடன் இணைந்து வரும் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், தேனி தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்புள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்

ஓ.பி.எஸ் – ரவீந்திரநாத்

அதற்கு பதிலளித்த எம்.பி ரவீந்திரநாத், “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், யார், யார்? வேட்பாளர்களாக  நிறுத்தப்படுவார்கள் என்பதை நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்.

கடந்த 2019 தேர்தலில்  போட்டியிட்ட போது நான் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் தேர்தலை சந்திப்பேன். தேனி தொகுதியை பொறுத்தவரை வரும் தேர்தலில் திமுகவுடன் தான் போட்டி. கூட்டணிக்காக பாஜகவுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது. இரண்டு மூன்று நாளில் கூட்டணி முடிவுகள் தெரியவரும்.

ஓ.பி.எஸ், டிடிவி தினகரன்

ஆளும் கட்சியான திமுக-வே இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்காமல் குழப்பத்தில் உள்ளனர். தேர்தல் தேதி அறிவித்த பின் தெளிவாக சொல்வோம்.” என்றார், ஓ.பி.எஸ். தேனியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என கேட்டதற்கு, “மக்களும், தொண்டர்களும் விரும்பினால் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் போட்டியிடுவார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *