திமுக – மதிமுக தொகுதிப் பங்கீடு இழுபறி… களத்துக்கு வந்த வைகோ – என்ன நடக்கிறது? | MDMK and DMK seat sharing talks going on

Vaiko Stalin.jpg

அதில் அவைத்தலைவர் அர்ஜுனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், அரசியல் ஆய்வு மைய செயலாளர் அந்திரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, “கடந்த தேர்தலைப்போல ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடங்களை இந்த முறையும் ம.தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும். மேலும் பம்பரம் சின்னத்தின்தான் போட்டியிடுவோம்’ எனத் தெரிவித்தோம். அதற்கு பதிலளித்த தி.மு.க-வினர், ‘ஒரு மக்களவை தொகுதி மட்டுமே ம.தி.மு.க-வுக்குத் தரப்படும்’ என்றனர். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

வைகோ-துரை வைகோ

வைகோ-துரை வைகோ
என்.ஜி.மணிகண்டன்

குறிப்பாக இந்த முறை திருச்சி அல்லது விருதுநகரில் போட்டியிட விரும்பும் துரை வைகோவுக்கு, ஏக வருத்தம். இதையடுத்துதான் தி.மு.க-வின் செயல்பாடுகளை ம.தி.மு.க-வினர் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டனர். இது தலைவரின் கவனத்துக்குச் சென்றது. இனியும் இதை வளரவிடக் கூடாது என்பதற்காக, அவரே நேரடியாக களத்துக்கு வந்துவிட்டார். முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவரை நேரில் சந்திக்க திட்டமிட்டார். அதன்படி துரை வையாபுரி, அர்ஜுன ராஜ், மல்லை சத்யா ஆகியோருடன் சென்று வாழ்த்து தெரிவித்தார். கூடவே ‘ம.தி.மு.க-வுக்கு ஒரு மக்களவை, மாநிலங்களவை சீட் ஒதுக்க வேண்டும்’ என தலைவர் பேசிவிட்டு வந்துவிட்டார். தலைவரே நேரடியாக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருப்பதால், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *