தமிழக பாஜக-வின் ‘ஆள் சேர்ப்பு’ அரசியல்… சுறுசுறுப்பா, சுணக்கமா?! | Tamil Nadu BJP is trying to poach cadres and leaders from other parties

Annamalai 113050 16x9.jpg

மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ‘எல்லா கட்சிகளிலிருந்தும் வந்து பா.ஜ.க-வில் இணைகிறார்கள். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியா அசுர வளர்ச்சி அடைந்துவருவதைக் கண்டு, பா.ஜ.க-வை நோக்கி பலர் வருகிறார்கள்’ என்றார்.

ஆனால், எதிர்பார்த்த பதவி கிடைக்காதது, உரிய அங்கீகாரமின்றி ஓரங்கட்டப்பட்டது போன்ற காரணங்களால் அதிருப்தியடைந்தவர்கள்தான், பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கிறார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

உதாரணமாக, காங்கிரஸ் கட்சியில் சட்டமன்றக்குழு தலைவர் பதவி, மாநிலத் தலைவர் பதவி, எம்.பி சீட் என தான் எதிர்பார்த்த ஒரு பதவிகூட கிடைக்கவில்லை என்பதால்தான் விஜயதரணி காங்கிரஸிலிருந்து வெளியேறி, பா.ஜ.க-வில் இணைந்தார் என்றுதான் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. மாறாக, காங்கிரஸ் கட்சியின் கொள்கை பிடிக்கவில்லை என்று அவர் வெளியேறவில்லை. அப்படித்தான், காங்கிரஸிலிருந்து கராத்தே தியாகராஜன், தி.மு.க-விலிருந்து வி.பி.துரைசாமி போன்ற சிலரும் பா.ஜ.க-வில் இணைந்தார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழக பா.ஜ.க-வின் ஆள் இழுக்கும் பணிகள் படு சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும் என டெல்லி தலைமை எதிர்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அந்த முயற்சிகள் தோல்வியில் தான் முடிகிறது என்பது கோயம்பத்தூரில் வெளிப்பட்டுவிட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *