சந்தேஷ்காளி விவகாரத்தில் மம்தாவின் அணுகுமுறை தேர்தலில் எதிரொலிக்குமா?! | Will Sandeshkhali protest be impact in coming lok sabha elections?

Fryyu42xgaeuvi6.jfif .png

சந்தேஷ்காளி விவகாரத்தை வைத்து, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்ற பிரசாரத்தை பா.ஜ.க முன்னெடுத்துவரும் நிலையில், பிரதமர் மோடியும் அந்தக் குற்றச்சாட்டை எழுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 35 தொகுதிகளைக் குறிவைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பல வியூகங்களை வகுத்தார். அதன் மூலம், 18 தொகுதிகளை பா.ஜ.க வென்றது. இந்த முறை 35 தொகுதிகளில் வென்றுவிட வேண்டும் என்ற இலக்குடன் பல வியூகங்களை வகுத்துவரும் பா.ஜ.க., சந்தேஷ்காளி விவகாரத்தை வலுவாகப் பற்றிக்கொண்டிருக்கிறது.

அமித் ஷா, மோடி

அமித் ஷா, மோடி

சந்தேஷ்காளி விவகாரத்தை நந்திகிராம், சிங்கூர் சம்பவங்களுடன் ஒப்பிட்டு பா.ஜ.க-வினர் பேசினாலும், அந்த இரு சம்பவங்கள் அளவுக்கு சந்தேஷ்காளி விவகாரம் மாநிலம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸுக்கு எதிராக அரசியல் ரீதியான அழுத்தத்தை இது ஏற்படுத்தலாமே ஒழிய, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைத் தாண்டி மாநிலத்தின் பிற பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸுக்கு தேர்தல் பாதிப்பை இது ஏற்படுத்திவிடாது என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *