Sandeshkhali: 55 நாள்கள் தலைமறைவு… திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜகான் ஷேக் கைது! | Sandeshkhali issue prime accused person and TMC leader Shahjahan Sheikh arrested

Ghemthuwaaaccl .jpeg

முதல்வர் மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்கத்தில், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி கிராமத்தில், திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் தனது ஆதரவாளர்களுடன், பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியதாக கடந்த மூன்று வாரங்களாகப் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சந்தேஷ்காலி கிராமத்தில் பதட்டமான சூழல் ஏற்பட, கிராமத்துக்குள் அரசியல் தலைவர்கள் உட்பட பலரும்நுழைவதைத் தடுக்கும் வண்ணம் கிராமத்தைச் சுற்றி போலீஸார் தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஷாஜகான் ஷேக் - திரிணாமுல் காங்கிரஸ் - Sandeshkhali

ஷாஜகான் ஷேக் – திரிணாமுல் காங்கிரஸ் – Sandeshkhali

இருப்பினும், ஷாஜகான் ஷேக்கை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். ஆனால், ஜனவரி 5-ம் தேதியே தலைமறைவானதால், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஒருகட்டத்தில், ஷாஜகான் ஷேக்கை கைதுசெய்யுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றம் கூற, இன்னும் ஏழு நாள்களில் அவரைக் கைதுசெய்வோம் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *