Delhi Chalo: `போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் பாஸ்போர்ட், விசா ரத்தாகும்!’ – போலீஸ் எச்சரிக்கை | ‘Will cancel passport, visa’: Haryana cops’ warning to protesting farmers

Jo0ji5u8 Farmers Protest 625x300 27 November 23.webp.png

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்

இது தொடர்பாக ஹரியானா மாநிலம், அம்பாலா மாவட்ட துணை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள சோஷியல் மீடியா பதிவில், `விவசாயிகள் போராட்டத்திற்கு பஞ்சாப்பில் இருந்து ஹரியானா வந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை ரத்து செய்ய உள்துறை அமைச்சகம் மற்றும் தூதரகத்திற்கு கடிதம் எழுதப்படும்.

கண்காணிப்பு கேமரா மற்றும் ட்ரோன்கள் மூலம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்களின் புகைப்படங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவர்கள் பெயரில் விசா அல்லது பாஸ்போர்ட் இருந்தால் ரத்து செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த ஏராளமானோர் வெளிநாட்டில் இருக்கின்றனர். இந்தியாவிற்கு வந்த அவர்களும், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர். விசா மற்றும் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டால் அவர்களால் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *