80 ரூபாய் பாக்கி பணத்தை தராத நடத்துநர்… 8000 ரூபாய் வழங்க அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்! | Srivilliputhur consumer court order to give 8000 rupees for reimbursement

Img 20240228 230716.jpg

பயணி ஒருவருக்கு, பயண டிக்கெட் தொகை போக மீதி 80 ரூபாயை தராமல் ஏமாற்றிய பேருந்து நடத்துநர் மற்றும் போக்குவரத்து மண்டல மேலாளருக்கு 8000 ரூபாய் அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுபற்றி நீதிமன்ற அலுவலர்கள் தரப்பில் விசாரித்தோம். கடந்த 2019-ம் ஆண்டு சாத்தூரில் இருந்து விருதுநகர் நோக்கி அரசு பேருந்தில் ஜெயபாரதி என்பவர் பயணம் செய்தார். அப்போது டிக்கெட்டுக்கான சரியான சில்லரை பணம் இல்லாததால் 100 ரூபாய் கொடுத்து நடத்துனரிடம் டிக்கெட் கேட்டிருக்கிறார். பயண டிக்கெட்டின் விலை 22 ரூபாய். இந்தநிலையில் பயணி ஜெயபாரதியிடம், 2 ரூபாய் சில்லரை கொடுத்துவிட்டு 80 ரூபாய் மீதியை வாங்கிக்கொள்ளுமாறு பேருந்து நடத்துநர் கூறியிருக்கிறார்.

நீதிமன்றம்

நீதிமன்றம்

ஆனால் ஜெயபாரதி, பேருந்தை விட்டு இறங்கும் நிலையிலும் மீதிப்பணம் ரூ.80-ஐ கொடுக்காமல் நடத்துநர் ஏமாற்றியுள்ளார். அத்தோடு மட்டுமில்லாமல், ஜெயபாரதியை தகாத வார்த்தையால் பேசி அவரை அவமானப்படுத்தியிருக்கின்றனர். இதனால் மனம் உடைந்துபோன ஜெயபாரதி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி சக்கரவர்த்தி, “நாகர்கோவில் மண்டலத்திற்கு உட்பட்ட நடத்துநர் எட்வின் மற்றும் மண்டல மேலாளர் ஆகியோர் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ புகார்தாரர் ஜெயபாரதிக்கு கொடுக்க வேண்டிய டிக்கெட்டுக்கான மீதி தொகை 80 ரூபாயை திருப்பி தர வேண்டும், பயணிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 5000 ரூபாயும், வழக்குச் செலவு தொகை 3000 ரூபாயும் சேர்த்து வழங்க வேண்டும்‘ என அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *