“பிரதமர் என்பதை மறந்து அரசு விழாவை அரசியல் மேடையாக்கி விட்டார் மோடி!” – திருமாவளவன் தாக்கு | Forgetting that he is the Prime Minister, he made the government function a political platform

Thiruma 1.jpg

பிரதமர் மோடி, தன்னை நம்பவில்லை தன் செல்வாக்கை நம்பவில்லை தன் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நன் மதிப்பை நம்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதுதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது .  எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்தால்தான்  அ.தி.மு.கவின்  வாக்குகளைப் பெற முடியும் என நினைக்கிறார். இதன் மூலம் அ.தி.மு.கவை பலவீனப்படுத்த வேண்டும்,  அதன் வாக்கு சதவிகிதத்தை சரியச் செய்ய வேண்டும் என பா.ஜ.க கணக்கு போடுகிறது என உணர முடிகிறது.  

திருமாவளவன்

திருமாவளவன்

இதில் அ.தி.மு.க தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தூத்துக்குடியில் பேசிய பிரதமர் மோடி, தான் ஒரு பிரதமர் என்பதையும்,  அரசு விழா என்பதையும் மறந்துவிட்டு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி மேடையில் இருக்கும் போதே தி.மு.கவை கடுமையாக விமர்சிக்க கூடிய உரையாக ஒரு அரசியல் பிரசார மேடையாக அதை அவர் பயன்படுத்திக் கொண்டார். எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் சுற்றி சுழன்று வந்தாலும் பரப்புரைகளை மேற்கொண்டாலும் தமிழ்நாட்டு மக்கள் மோடி வித்தையை நம்ப மாட்டார்கள் பாஜகவுக்கு செல்வாக்கு உருவாகாது.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *