`நீங்கள் அதைத்தான் விரும்புகிறீர்கள் என்றால் நான் வெளியேறத் தயார்!’- காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் | If you want to bid farewell to me, I am ready to leave, says congress senior leader kamalnath

Ap20080467987491.jpg

இத்தகையப் பேச்சுகளுக்கு, “அப்படி ஏதாவது செய்தி இருந்தால் சொல்கிறேன்” எனக் கூறிவந்த கமல்நாத், “இது வெறும் ஊடக உருவாக்கம். அத்தகைய செய்திகளை ஊடகங்கள் மறுக்க வேண்டும்” எனக்கூறி, நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், தனது கட்சியினர் விரும்பினால் வெளியேறத் தயார் என கமல்நாத் தெரிவித்திருக்கிறார்.

தனது சொந்த தொகுதியான சிந்த்வாராவில், ஹராய் பகுதியில் நேற்று நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் தொண்டர்கள் முன்னிலையில் பேசிய கமல்நாத், “ஒருவேளை கமல்நாத்துக்கு நீங்கள் விடையளிக்க விரும்பினால், நான் வெளியேறத் தயார். அது உங்களின் விருப்பம். என்னை நான் திணிக்க விரும்பவில்லை. இது உங்களுடைய விருப்பம். இந்தத் தொகுதியில் பா.ஜ.க தன்னை ஆக்ரோஷமாக முன்னிறுத்துகிறது. ஆனால், காங்கிரஸ் தொண்டர்கள் பீதி அடைய வேண்டாம். எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் வாக்களிக்க வேண்டும், உங்கள் அனைவரின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார்.

சிந்தியா - திக்விஜய் - கமல்நாத்

சிந்தியா – திக்விஜய் – கமல்நாத்

மத்தியப் பிரதேசத்தில் 2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றதையடுத்து கமல்நாத் முதல்வரானார். ஆனால், அடுத்த 15 மாதங்களிலேயே காங்கிரஸின் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்குச் செல்ல, காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. இப்படியிருக்க, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்த காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *