`தவறு செய்தது காங்கிரஸ் தலைமைதான்..!’ – விஜயதரணி விவகாரத்தில் கொதிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ | congress mla prince spoke about kanniyakumari lok sabha election

Eb805ef2 7998 4ec0 A286 438693f4ed70 20240226 102618 0000.jpg

“விஜயதரணிக்கு மூன்றாவது முறை சீட் தந்தது தலைமை செய்த தவறு என்றால், உங்களுக்குத் தந்தது மட்டும் எப்படிச் சரியாக இருக்கும்?”

“மாணவர் காங்கிரஸில் இருந்த சமயத்தில், 18 வயதிலேயே கட்சிக்காக சிறைக்குப் போனவன் நான். விஜயதரணியை முதன்முறையாக வேட்பாளராக அறிவித்தபோது, அவரது முகம்கூட யாருக்கும் தெரியாது. டெல்லியிலும், சென்னையிலும் வழக்கறிஞராக இருந்தவரை திடீரென தொகுதிக்கு இறக்குமதி செய்தார்கள். தொகுதி நிர்வாகிகள் கேட்டபோது, ‘ஒவ்வொரு தலைவருக்கும் சீட் பங்கு வைத்ததில், மணிசங்கர் ஐயர் தனக்குக் கிடைத்த சீட்டை விஜயதரணிக்கு கொடுத்துவிட்டார்’ என்றார்கள். விளவங்கோடு தொகுதியில் எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு மதிப்பு கொடுக்காமல், எங்கிருந்தோ வந்த விஜயதரணிக்கு சீட் கொடுத்ததன் விளைவுதான் இப்போது இப்படி நடந்திருக்கிறது.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *