தலையிட்ட காங்கிரஸ் தலைமை; சபாநாயகர் எடுத்த ஆக்‌ஷன் – நெருக்கடியில் இருந்து தப்பியதா இமாச்சல் அரசு?

Ocp5oha Vikramaditya Singh 625x300 28 February 24.jpg

இமாச்சல பிரதேசத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர், அரசுக்கு ஆதரவு கொடுத்து வந்த மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என 9 பேர் கட்சி மாறி வாக்களித்ததால் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்றார். அதோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரையும் பா.ஜ.க ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து அண்டை மாநிலத்திற்கு பா.ஜ.க. அழைத்துச்சென்றது. மேலும் சட்டமன்றத்தில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவேண்டும் என்று பா.ஜ.க.தலைவர்கள் ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தனர்.

இதனிடையே சட்டமன்றத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட 15 பா.ஜ.க உறுப்பினர்கள் சட்டமன்ற கூட்டத்தில் இருந்து சபாநாயகரால் நீக்கப்பட்டனர். மேலும் புதிய திருப்பமாக மாநில அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறி கடிதம் அனுப்பினார். இதனால் ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுக்குள் சுக்விந்தர் சிங் அரசு கவிழும் அபாயம் ஏற்பட்டது.

இதையடுத்து கட்சி தலைமை இப்பிரச்னைக்கு தீர்வு காண அவசரமாக கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார், புபிந்தர் ஹோடா மற்றும் புபேஷ் பாகல் ஆகியோரை அனுப்பி வைத்தது. காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தியும் இதில் தலையிட்டு சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து விக்ரமாதித்ய சிங் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற்றுக்கொண்டார். இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கட்சி தலைவர்களுடன் பேசினேன். தனி நபர்களின் நலனைவிட கட்சியின் அமைப்பு மற்றும் ஒற்றுமை முக்கியமானது. கட்சியின் நலனை கருத்தில் கொண்டு எனது ராஜினாமா முடிவை கைவிடும் நிலைக்கு வந்திருக்கிறேன்” என்றார்.

அரசுக்கு இருந்த நெருக்கடி நீங்கிவிட்டதா என்று கேட்டதற்கு, “ஆரம்பத்தில் இருந்தே அரசுக்கு நெருக்கடி இல்லை. நெருக்கடி உருவாக்கப்பட்டது. அனைவரும் இணைந்து செயல் பட்டால் தீர்வு காணமுடியும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலில் எனது தந்தையின் பெயரை சொல்லி வெற்றி பெற்றதாகவும், ஆனால் எனது தந்தையை கட்சி தலைமை மதிக்கவில்லை என்றும், அவருக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கவில்லை என்றும், முதல்வர் எம்.எல்.ஏ.க்களை புறக்கணிப்பதாகவும் விக்ரமாதித்ய சிங் குற்றம் சாட்டி இருந்தார்.

மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 6 எம்.எல்.ஏ.க்கள் தங்களது வழக்கறிஞர்களுடன் மாநில சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தனர். அவர்கள் மீது கட்சி மாறி வாக்களித்தற்கு கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது சபாநாயகர் முடிவு செய்வார். நேற்று சட்டமன்றத்தில் பட்ஜெட்டும் நிறைவேற்றப்பட்டது.

பாஜக, காங்கிரஸ்

15 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சட்டமன்றத்தில் 10 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. அதோடு அரசுக்கு இருந்த நெருக்கடியும் தற்காலிகமாக விலகி இருக்கிறது. எங்களை சட்டமன்றத்தில் இருந்து நீக்கி விட்டு பட்ஜெட்டை நிறைவேற்றி இருப்பதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.தாக்கூர் குற்றம் சாட்டி இருக்கிறார். நாட்டின் வடமாநிலத்தில் இமாச்சல் பிரதேசத்தில் மட்டுமே இப்போது காங்கிரஸ் அரசு இருக்கிறது. அதனையும் அகற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் பா.ஜ.க. செயல்பட்டது. ஆனால் பா.ஜ.க.தலைவர்கள் மற்றும் சபாநாயகர் விரைந்து செயல்பட்டதால் ஆட்சி கவிழ்வதில் இருந்து தப்பித்துக்கொண்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *