கழுகார்: `ஆதரவை’ வாரிக்குவித்த மலர்க் கட்சி சீனியர் முதல் காங்கிரஸைப் பணியவைக்க திமுக திட்டம் வரை! | Kazhugar updates on 2024 election and parties action on it

Juniorvikatan.jpeg

பா.ஜ.க-விலிருந்து விலகி, கடந்த நவம்பர் மாதம் அ.தி.மு.க-வில் இணைந்தார் ஆற்றல் அசோக்குமார். கட்சியில் சேர்ந்ததிலிருந்தே, ‘எனக்கு ஈரோடு தொகுதியைத் தந்தால், பக்கத்திலிருக்கும் திருப்பூர் தொகுதிக்கும் சேர்த்து நானே செலவு செய்கிறேன்’ என்று எடப்பாடியை நச்சரித்துவருகிறாராம் அவர். ஆனால், அ.தி.மு.க மாஜிக்களோ, ‘அண்ணா… அவருக்கு சீட் கொடுக்காதீங்கண்ணா’ என்று முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

“இப்போது அவருக்கு இடம் கொடுத்தால், பண பலம் மிக்க அவர் ஈரோட்டில் வேகமாக வளர்ந்துவிடுவார்… லோக்கல் அரசியலில் நமக்கான முக்கியத்துவம் குறையும்” என்பதே அவர்களின் எதிர்ப்புக்குக் காரணமாம். சீட் மறுத்தால், அதைச் சொல்லியே, ‘ஆள் தூக்கி பா.ஜ.க., மறுபடியும் ஆற்றல் அசோக்கைத் தங்கள் கட்சிக்கே இழுத்துவிடுவார்களே…’ என்று யோசிக்கிறாராம் எடப்பாடி.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *