Live தூத்துக்குடி; ரூ.17,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி – கனிமொழி எம்.பி பங்கேற்பு! | PM Modi inaguratees rs 17000 crore value projects in tuticorin

Whatsapp Image 2024 02 28 At 10 16 44 Am.jpeg

இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்திறங்கிய பிரதமர் மோடி, அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்துகொண்டார். அதையடுத்து, தூத்துக்குடியில், இன்று காலை ரூ.17,000 கோடி மதிப்பிலான முக்கியத் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கிவைப்பதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் நேற்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

குறிப்பாக, வ.உ.சி துறைமுகத்தில் வெளி துறைமுக சரக்குப் பெட்டக முனையத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுதல், கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பலை அறிமுகம் செய்தல், ரயில்வே அமைச்சகத்தின் ரூ.1,477 கோடி மதிப்பிலான வாஞ்சி மணியாச்சி – நாகர்கோவில் ரயில்பாதை திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவருதல், ரூ. 4586 கோடி மதிப்பிலான சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் நான்கு திட்டங்களை மோடி தொடங்கிவைப்பதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *