ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் சிகிச்சை பலனின்றி காலமானார்! |rajiv gandhi murder case released person santhan died due to health problem

Ghzjea Boaaogub.jpeg

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், கடந்த ஒரு மாத காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முன்னதாக, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவந்த ஏழு பேரில், முதலில் பேரறிவாளனை 2022, மே 18-ம் தேதி விடுதலை செய்த உச்ச நீதிமன்றம், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேரையும் நவம்பரில் விடுதலை செய்தது. இதில், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால், விடுதலைக்குப் பின் திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *