தொகுதி பங்கீடு உறுதியாகும் முன்பே… `சிதம்பரத்தில்தான் போட்டி’ – திருமா அறிவிப்பின் பின்னணி என்ன? | Reason behind VCK thiruma’s announcement on contesting in chithambaraam

Whatsapp Image 2023 11 11 At 12 43 36 4 .jpeg

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் கடலூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்றத் தொகுதிகள் திருமாவுக்கு பாசிட்டிவாக இருப்பதாக ரிப்போர்ட் ஆனது. இதனால் மாற்று தொகுதிகளை பரீசிலனை செய்யலாம் என்று சொன்னாலும், சிதம்பரத்தில் போட்டியிடவே விரும்பினார் திருமாவளவன். எனவே அரியலூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளில் கிளை கட்டமைப்பு, பூத் கமிட்டி அமைப்பது போன்ற வேலைகளை வேகப்படுத்தி களத்தை வி.சி.க-வுக்கு சாதமாக மாற்றும் பணிகள் கிட்டதட்ட முடியும் தருவாயில் இருக்கின்றன. இதெல்லாம் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என தேர்தல் வந்தால் தான் தெரியும்” என்கிறார்கள்.

அங்கனூர் சிவா

அங்கனூர் சிவா

நம்மிடம் பேசிய வி.சி.க-வின் அரியலூர் மேற்கு மாவட்ட அங்கனூர் சிவா, “சிதம்பரத்தில் போட்டியிடுவேன் என இன்று நேற்று சொல்லவில்லை. பல மாதங்களாகவே எங்கள் தலைவர் பேசிவருகிறார். சொல்லப்போனால், அது அவரது தொகுதி, சுமார் 4 முறை போட்டியிட்டிருக்கிறார். 5-வது முறையாகவும் போட்டியிடவுள்ளார். தொகுதி பேச்சுவார்த்தை நிறைவடையவில்லை என்றாலும் சிதம்பரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தி.மு.க ஒதுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிதம்பரத்தில் விசிக வெல்லுமா என்ற கேள்விக்கே இடமில்லை. உறுதியாக பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தலைவர் திருமாவளவன் வெல்வார். சிதம்பரம் தாண்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி எங்கெல்லாம் போட்டியிடும் என்பது அதிகாரப்பூர்வமாக விரைவிலேயே தெரியவரும்” என்றார் நம்பிக்கையுடன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *