செந்தில் பாலாஜி: 2வது முறையாக ஜாமீன் மறுப்பு – அடுத்த 'செக்' வைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Whatsapp Image 2024 01 30 At 17 36 24.jpeg

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது.

நீதிபதி அல்லி – அமைச்சர் செந்தில் பாலாஜி

பிப்ரவரி 14, 15, 21ஆம் தேதிகளில் நடைபெற்ற விசாரணையின்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இரு வாதங்களும் பிப்ரவரி 21ம் தேதி முடிவடைந்த நிலையில், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மனுவில் எந்த தகுதியும் இல்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி

அதேசமயம், செந்தில் பாலாஜி, கடந்த எட்டு மாதங்களாக சிறையில்  உள்ளதாக கூறுவதால், அவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை தினசரி அடிப்படியில் விசாரணை செய்து, மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *