சிவகங்கை: களத்தில் இறக்கப்பட்ட பெண் பொறியாளர்… அறிமுகம் செய்துவைத்த சீமான் தாயார்! | Seeman’s mother introduced Sivaganga NTK candidate Ezilarasi!

Ghv7aulacaam 3r 1 .jpg

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு, வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்திவருகிறது நாம் தமிழர் கட்சி. அந்த வகையில், சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் எழிலரசி விசயேந்திரனுக்கான அறிமுகக் கூட்டத்தில் சீமானின் தாயார் அன்னம்மாள் பங்கேற்று, வேட்பாளரை அறிமுகம் செய்து வைத்திருப்பது கவனம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, 2019 நாடாளுமன்றத் தேர்தலைப்போலவே 20 பெண்களுக்கும் 20 ஆண்களுக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. 31 தொகுதிகளுக்கான வேட்பாளரகள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளும் நடந்துவருகிறது. இதற்கிடையில் திருவாரூர் மாவட்டம், இடும்பாவனத்தில் திருச்சி வேட்பாளர் ராஜேஷ், பெரம்பலூர் வேட்பாளர் தேன்மொழி, தஞ்சாவூர் வேட்பாளர் ஹூமாயூன் கபீர், நாகை வேட்பாளர் கார்த்திகா மற்றும் மயிலாடுதுறை வேட்பாளர் காளியம்மாள் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான். அதேபோல் சிவகங்கை வேட்பாளர் எழிலரசி விசயேந்திரனுக்கான அறிமுகக் கூட்டம் பிப்ரவரி 27-ம் தேதி மானாமதுரையில் நடைபெற்றது.

வேட்பாளார் அறிமுக கூட்டம் - இடும்பாவனம்

வேட்பாளார் அறிமுக கூட்டம் – இடும்பாவனம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *