இந்திய மக்களின் குடும்பச் செலவு: ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள இடைவெளி… எவ்வளவு தெரியுமா? |Indian people family expenses research and details

Family 4937226 1280.jpg

இந்தியாவில் உள்ள குடும்பங்களின் மாதாந்திர செலவு என்ன என்பது குறித்த தரவுகளை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office) வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இது குறித்த ஆய்வு 2011 – 12ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 11 வருடங்கள் கழித்து ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023-க்கு இடைப்பட்ட காலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்தியாவில் உள்ள குடும்பங்கள் எந்த உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள் மற்றும் எதற்காக அதிகம் செலவிடுகிறார்கள் என்பது போன்ற கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டது. 

கணக்கெடுப்பில் 2,61,746 குடும்பங்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கிராமப்புறங்களில் 15,5014 குடும்பங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் 1,06,732 குடும்பங்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. 2011-12ம் ஆண்டின் கணக்கெடுப்பில் 347 பொருட்கள் (Items) பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. சமீபத்திய ஆய்வில், 405 பொருட்கள் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டது.

உணவும் செலவும்….

*மாதாந்திர சராசரி தனிநபர் நுகர்வோர் செலவை (MPCE) எடுத்துக் கொண்டால், கிராமப்புறங்களில் சராசரியாக 3,773 ரூபாய் செலவிடுகிறார்கள். இதில் உணவிற்கு 1,750 ரூபாய், உணவு அல்லாத பொருட்களுக்கு 2,023 ரூபாய் செலவு செய்கிறார்கள். 

*அதுவே நகர்ப்புறங்களில் சராசரியாக 6,459 ரூபாய் செலவிடுகிறார்கள். இதில் உணவுக்கு 2,530 ரூபாயும், உணவு அல்லாத பொருட்களுக்கு 3,929 ரூபாயும் செலவிடுகிறார்கள். 

*உணவுப் பொருட்களுக்காகக் கிராமப்புற வீடுகளில் 46 சதவிகிதமும், நகர்ப்புற வீடுகளில் 39 சதவிகிதமும் செலவிடப்படுகிறது. 

*உணவு அல்லாத பொருள்களில் மருத்துவ சிகிச்சை, கல்வி, போக்குவரத்து, நுகர்வோர் சேவைகள், பொழுதுபோக்கு, வாடகை, உடை மற்றும் படுக்கை, பொருள்கள், ஃபுட்வியர் மற்றும் புகையிலை ஆகியவை அடங்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *