Hijab: “ஒரு பெண் என்ன அணிய வேண்டும் என்பது அவருடைய விருப்பம்!” – மாணவியின் கேள்விக்கு ராகுல் பதில் | What to wear is your decision, congress MP rahul gandhi answer to woman student question about hijab

Gridart 20240227 100125149.jpg

கர்நாடகாவில் கடந்த பா.ஜ.க ஆட்சியின்போது 2022 ஜனவரியில், உடுப்பி அரசுப் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஹிஜாப் அணிந்துவந்த இஸ்லாமிய மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, ஹிஜாப் விவகாரம் பெரியளவில் வெடித்தது. தொடர்ந்து வலதுசாரி அமைப்புகளும் ஹிஜாபுக்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தன. பின்னர், பள்ளி கல்லூரிகளில் ஒரே மாதிரியான சீருடைகள்தான் பின்பற்றப்பட வேண்டும் என்று கூறிய பா.ஜ.க அரசு, பள்ளி கல்லூரிகளில் ஹிஜாபுக்கு தடை விதித்தது.

 Hijab - ஹிஜாப் விவகாரம்

Hijab – ஹிஜாப் விவகாரம்

கர்நாடக உயர் நீதிமன்றமும் மாநில அரசின் தடை உத்தரவை உறுதிசெய்தது. இருப்பினும், இத்தகைய உத்தரவு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த அதிருப்தி, 2023, மே மாதம் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியின் ஒருபகுதியாகவும் அமைந்தது. பின்னர், தனிப்பெரும்பான்மையாக ஆட்சியமைத்த காங்கிரஸ், கடந்த அக்டோபரில் போட்டித் தேர்வுகளின் போது இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதித்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *